Sunday 3 May 2020

ரமழான் பகல் நேரங்களில் ஏற்படும் நெஞ்செரிவை எவ்வாறு தவிர்ப்பது? – Dr.Muhammad Abdullah Jazeem M.B.B.S, M.R.C.G.P – நோன்பு நோற்றாலானது உடல் உள ஆரோக்கியமிகு செயலாகும்' Like|fallow|share|


தற்சமயம் பல கோடி கணக்கான முஸ்லிம்கள் அதிகாலை தொடக்கம் மாலை வரை ரமழான் நோன்பை நோற்றவாறு உள்ளனர். இவ்வகையான நோன்பானது பல வழிகளில் எமக்கு நன்மை பயக்க வல்லது. அவையாவன, உடல் தொழிற்பாடு சம்மந்தப்பட்ட நன்மைகள் உள தொழிற்பாடு சம்மந்தப்பட்ட நன்மைகள் ஆண்மீகம் சம்மந்தப்பட்ட நன்மைகள் எமது உடற் கலங்களானது புரதம், மாப்பொருள் (starches), கொழுப்பு (Lipids ) மற்றும் நீர் கொண்டு உருவாக்கப்பட்டது. எமது உடலிற்கு தேவையான முதற்தர சக்தி குளுக்கோஸ் (கார்போஹைட்ரெட்ஸ்) மூலமாக சாதாரன நிலைமயில் உடலிற்குக் கிடைக்கப்பெறுகிறது. எனினும் நோன்பின் பிற்பகுதியில் கொழுப்பின் மூலம் உருவாகும் கீடோன் அலகுகளால் (ketone bodies) மூளைக்கு தேவையான சக்தி மாற்றீடாக உருவாக்கப்பட்டு ஈடுசெய்யப்படுகிறது. இவ்வாறு உடலில் குளுகோஸ் அளவு குறையும் போது கீடோன் அலகுகளால் வழங்கும் சக்தியானது உடலுக்கு அனுசேப தாக்க அழுத்தங்களை ஈடு செய்யும் திறனை கற்றுக்கொடுக்கிறது. இதனால், மூளையின் செயற்திறன் பன்மடங்கு அதிகரிக்கின்றது. (build up another metabolic pathway) ஒரு ஆராய்ச்சியில் கிடைக்கும் சான்றின் மூலம் எமக்கு அறியக்கிடைப்பது நோன்பானது பக்கவாதம், மேலும் வயோதிப காலங்களில் ஏற்படும் மறதி (Parkinson's infection, Alzheimer's illness), மூளை, முண்ணானில் ஏற்றபடும் அழுத்தங்களையும் ( stress related injury) குறைப்பதாகக் கூறுகிறது. நோன்பும் – ஞாபகசக்தியும் மற்றும் விவேகமும் நோன்பு நோற்றப்பதனால் ஏற்றப்படும் உடல் அனுசேப சக்தி சுழற்சி (discontinuous metabolic exchanging system) முறைமையானது ஞாபகசக்தியையும் சிந்தனாசத்தியையும் வெகுவாக அதிகரிப்பதாக ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் காணக்கிடைக்கிறது. *எனவே உங்கள் குழந்தைகளுக்கு நோன்பு நோற்கக் கற்றுக்கொடுங்கள்.* - Nature Neuroscience- இன்னொரு ஆராய்ச்சியின் படி நோன்பின் மூலம் ஏற்படும் உடல் நிறை குறைவானது நீரிழிவு தொடக்க நிலையில் ஏற்படும் இன்சுலின் குறைவை நிவர்த்தி செய்யும் ஒரு அரு மருந்தாகப் பார்க்கப்படுகிறது. பிறிதொரு ஆய்வின் படி உடலுக்கு தேவையான கலோரி அளவை 825 கலோரியாக நாளொன்றுக்கு மட்டுப்படுத்தப்படும் போது ஏற்படும் கணிசமான உடல் நிறைக் குறைவு மூலம் தொடக்க நிலை நீரிழிவு நோய், குருதி அழுத்தம் என்பனவற்றை மருந்துகள் மூலம் குணப்படுத்துவதை விடவும் மிக ஆரோக்யமாக குணப்படுத்தலாம் என அறியக்கிடைக்கின்றது. 'Essential Care-drove weight the executives' உடல் நிறைக் குறைப்பு மற்றும் ஒழுங்கான உடற் பயிற்சி என்பன ஆரோக்கியமான வாழ்விற்கு இன்றியமையாதவையாகும்.இவற்றின் மூலம் இன்சுலின் சுரப்பு உடற் கலங்களுக்குள் செல்ல ஏற்படும் தடை கணிசமான அளவு குறைக்கப்படுகிறது. உடல் நிறையும், இடுப்பு சுற்று பருமனும் அதிகரிப்பதானது இதயம் சம்மந்தப்பட்ட நோய்களுக்கான ஆரம்பப் படித்தரமாகும். இவ்வாறு உடற் பருமன் கூடும் போது குருதி அழுத்தம்,கொலெஸ்டெரோல் (triglycerides) படிவு அதிகமாவதுடன் நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டமும் எட்டப்படுகின்றது. இடுப்பு சுற்றானது ஆண்களுக்கு 40 inches விட அதிகமாகவும் பெண்களுக்கு 35 inches ஐ விடவும் அதிகரிக்கும்போது உடற் கட்டமைப்பில் மாற்றம் உள்ளும் புறமுமாக ஏற்படுகிறது. இதனை பின் வரும் படம் விளக்குகிறது.இவ்வுடல் செயற்பாடை metabolic disorder என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ( representation is in the connection) நோன்பானது அதனை உரிய முறையில் நோற்றக்கப்படும் போது உடல் நிறை குறைக்க உதவுகின்றது. மற்றும் முறையான இதயத்துடிப்பு வேகத்தையும் , சுவாசத்தையும் உரிய அளவிற்கு மட்டுப்படுத்துகிறது. மேலும் குருதி அழுத்தத்தை சீராக்குகிறது. இறுதியாக சமிபாட்டு தொகுதியின் வினைத் திறனை அதிகரிக்கிறது. 'நோன்பு நோற்றப்பதனால் பொதுவாக இதயம் ஆரோக்கியம் பெறுகிறது' சமிபாட்டுத் தொகுதியில் ஏற்படும் வினைத்திறன்கள் எமது சமிபாட்டுத் தொகுதி கணிசமான நன்மை பயக்கும் நுண்ணுயிர்களைக் கொண்டுள்ளது. இவை பொதுவாக பாக்டீரியாக்களின் தொகுதியாகும். இவை உணவு ஜீரணித்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நோன்பின் போது சமிபாட்டுத் தொகுதியானது ஓய்வில் இருப்பதனால் இந்நுண்ணுயிர்களின் பெருக்கம் வினைத்திறன் என்பன அதிகரிப்பதால் சமிபாட்டுத் தொகுதி திறன்பட செயற்படுகிறது. மன அழுத்தம் குறைவதால் சந்தோசம் அதிகரிக்கின்றது இன்னொரு அறிக்கையின்படி உடற்ப்பயிற்சி , நோன்பு நோற்றல் என்பன மன அழுத்தத்தைக் குறைத்து சந்தோசத்தை அதிகரிப்பதாகக் அமைகின்றன...

No comments: