
கொலன்னாவை, இராஜகிரிய மற்றும் கண்டி – கொலபிஸ்ஸ ஆகிய பிரதேசங்களைச் பிரதேசங்களை சேர்ந்த 138 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி இராஜகிரிய பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் 29 பேரும் கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 27 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இன்று (05) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் கண்டி – கொலபிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
குறித்த மூன்று பிரதேசங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையிலேயே இந்த தனிமைப்படுதத்ல் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment