Sunday 3 May 2020

கொரோனாவுக்கு நடுவே .. வங்கதேசத்தில் பசி பட்டினியுடன் தஞ்சமடைந்த 40 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் By m.waseem.t.m


டாக்கா: உலகமே கொரோனா அச்சத்தால் முடங்கிக் கிடக்கும் நிலையிலும் 40 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் வங்கதேசத்தில் பசி பட்டினியுடன் தஞ்சமடைந்துள்ளனர். மியான்மரில் இருந்து ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சி வங்கதேசத்துக்கு அகதிகளாக ரோஹிங்கியா முஸ்லிமள் நீண்ட ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தெற்கு வங்கதேச கடற்பரப்பில் 40 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் கரை இறங்கினர். 40 Rohingya refugees land in Bangladesh மியான்மரில் இருந்து படகுகள் மூலம் வந்து பின்னர் இவர்கள் கரை ஒதுங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. ஏற்கனவே பல நாடுகள் கொரோனா அச்சத்தால் அகதிகளை நாடுகளுக்குள் அனுமதிப்பது இல்லை. இதனால் அவர்கள் பட்டினியால் நடுக்கடலிலேயே தாங்கள் வந்த படகுகளிலேயே உயிருக்குப் போராடி வருகின்றனர். இந்த துயரையும் சுமந்தபடி 40 ரோஹிங்கியாக்கள் வங்கதேச கரையில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 பேர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். ஏற்கனவே வங்கதேசமும் ரோஹிங்கியா அகதிகளை ஏற்கப் போவதில்லை என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. Fallow our facebook page.. #
SL_TAMIL_MUSLIM_TV_NETWORK

No comments: