Saturday 9 May 2020

ரமழானில் மூன்று நேரங்கள்√ ||அவற்றை தவற விடாது பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்....√



  • 👉ஒவ்வொரு நாளும் மூன்று மணித்தியாலங்கள்... அவற்றின் சிறப்பை இழந்துவிடாதீர்கள்.... எந்த வேலையாக இருந்தாலும் நீங்கள் அந்த நேரங்களை பயன்படுத்திக் கொள்வதில் பக்குவமாக இருங்கள்.... ஒரு நாளைக்கு மூன்று மணித்தியாலங்கள் மாத்திரமே.... மாத இறுதியில் கூட்டுத்தொகை 90 மணித்தியாலங்கள் 1️⃣முதலாவது நேரம் *இப்தாருடைய நேரம்* ... இப்தாருக்கான ஏற்பாடுகளை நேரகாலத்துடனே செய்துகொள்ளுங்கள்.... அந்த நேரத்தை துஆவுக்காக மட்டுமே ஒதுக்குங்கள்.... 👉ஏனெனில் நோன்பாளிகளின் துஆ மறுக்கப்படமாட்டாது. உங்களுக்காக, உங்கள் நெருங்கிய உறவுகளுக்காக துஆ கேளுங்கள்.... ஒட்டு மொத்த முழு உலக முஸ்லிம்களுக்காகவும் துஆ செய்யுங்கள் மரணித்த முஸ்லீம்களையும் மறந்துவிடாதீர்கள்.... அவர்கள் உங்களின் துஆவிற்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள்...... தன் சகோதர முஸ்லிம்களுக்காக துஆ செய்பவர்களுக்கு மலக்குமார்கள் துஆ செய்வார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் 2️⃣இரண்டாவது நேரம் *இரவின் கடைசிப் பகுதி* அந்த நேரத்தில் இறைவனுடன் தனிமையாக உறையாடுங்கள்.... அவன் உங்களைப் பார்த்து கேட்கிறான்.... என்னை அழைப்பவர்கள் யாரேனும் உண்டா? அவர்களின் அழைப்புக்கு நான் பதிலளிப்பேன்.. என்னிடம் (அவர்களின் தேவைகளை) கேட்பவர்கள் யாராலும் இருக்கிறார்களா? ... அவர்களுக்கு நான் (அவர்கள் கேட்பதை) கொடுப்பேன்.... என்னிடம் பாவ மன்னிப்பு கேட்போர் உண்டா?... அவர்களுக்கு நான் அவர்களுடைய பாவங்களை மன்னிப்பேன்.... எனவே அந்த நேரத்தில் அதிகமாக இஸ்திஃபார் செய்யுங்கள்... 3️⃣மூன்றாவது நேரம். *சுபஹ் தொழுகை முதல் சூரியன் உதிக்கும் வரை* சுபஹ் தொழுகை முதல் சூரியன் உதிக்கும் வரை நீங்கள் தொழுத பாயில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.... அந்த நேரத்தில் குர்ஆன் ஓதுதல், திக்ர் போன்ற விடயங்களில் அதிகமதிகம் ஈடுபடுங்கள் 🍂அவை 90 மணித்தியாலங்கள் மாத்திரமே.... மற்றைய நேரங்களில் திக்ர் செய்யுங்கள்... இயலுமானவரை குர்ஆன் ஓதுங்கள். கோல், பொய், புறம், கேலிக்கை போன்ற பாவமான விடயங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்... அவை உங்கள் நோன்பின் நன்மைகளை அழித்துவிடும்.... பர்ளான தொழுகைகளை அவற்றின் ஆரம்ப நேரங்களில் தொழுவதில் பேனுதலாக இருங்கள்.. சுன்னத்தான தொழுகைகளிலும் ஈடுபடுங்கள்.... வெறுமனே 18/17 நாட்கள்..... அவை அவசரமாக முடிந்துவிடும்..... எனவே நேர காலத்தை உரிய முறையில் பயன்படுத்துவோம்

No comments: