Friday 1 May 2020

மிகப்பெரிய 'இறுதி' ஊர்வலத்திற்கு 'தயாராகும்' வடகொரியா?... வைரலாகும் 'செயற்கைக்கோள்' படங்கள்!

வடகொரியா மிகப்பெரிய இறுதி ஊர்வலத்திற்கு தயாராவதாக வெளியான செயற்கைக்கோள் படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவை விட வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்த தகவல்கள் தான் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. முதலில் அவருக்கு கொரோனா இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் இதய அறுவைசிச்சை செய்து கொண்டதாகவும், அதில் அவர் நினைவை இழந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அண்டை நாடான தென் கொரியா இந்த தகவல்களை தொடர்ந்து மறுத்து வருகிறது. கிம் நலமுடன் இருப்பதாக தொடர்ந்து தென் கொரியா தெரிவித்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கிம்மின் உடல்நிலை குறித்த தகவல்களை அறிய ஆர்வம் காட்டி களத்தில் குதித்துள்ளன. குறிப்பாக சீனா, அமெரிக்கா இரண்டு நாடுகளும் இந்த போட்டியில் நேரடியாக இறங்கி இருக்கின்றன. கடந்த 11-ம் தேதியில் இருந்து கிம் பொதுவெளியில் தோன்றாததால் அவர் சிகிச்சையில் தான் இருக்கிறாரா? என்ற சந்தேகம் உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன் கிம்மின் ட்ரெயின் வடகொரியாவின் வொன்சான் கடற்கரை ரிசார்ட்டுக்கு அருகிலுள்ள அவரது அரண்மனைக்கு பக்கத்தில் நிற்பது கண்டறியப்பட்டது. #SL_TAMIL_MUSLIM_TV_NETWORK Ft.by. M.WASEEM.T.M North Korea is ready for the biggest 'funeral procession' ... Viral 'satellite' pictures! Satellite images released as North Korea prepares for the largest funeral have shocked. North Korean President Kim Jong Un's health is more hot topic than Corona. At first he was said to have a corona. It was later revealed that she had had heart surgery and lost consciousness. But neighboring South Korea has consistently denied this information. South Korea continues to report that Kim is well. Meanwhile, countries including the United States, China, and Japan have jumped into the spotlight on Kim's health. China and the United States, in particular, are directly involved in this contest. Has Kim been in therapy since last 11, when she hasn't appeared in public? There is suspicion among the countries of the world. A few days ago, Kim's train was found standing next to her palace near North Korea's Wonsan Beach Resort. #Kim_Jong_Un #North_Korea_president #SL_TAMIL_MUSLIM_TV_NETWORK Ft.by.M.WASEEM.T.M

No comments: