Saturday 2 May 2020

துரத்தி அடித்துவிட்டோம்.. அமெரிக்க போர் கப்பலை விரட்ட ஜெட்களை அனுப்பிய சீனா.. போருக்கு தயார் ஆகிறதா?

பெய்ஜிங்: தென் சீன கடல் எல்லையில் சுற்றிக்கொண்டு இருந்த அமெரிக்காவின் போர் கப்பல்களை விரட்டி அடித்துவிட்டதாக சீனா தெரிவித்து இருக்கிறது. வட கொரிய அரசியல் குழப்பங்களை பயன்படுத்த மாஸ்டர் பிளான்.. கொரோனா பரவல் ஒரு பக்கம் இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் போர் மூள்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவ சீனாதான் காரணம் என்று அமெரிக்கா கடுமையாக குற்றஞ்சாட்டி வருகிறது. இன்னொரு பக்கம் தென் சீன கடல் எல்லையில் கடுமையான போர் ஆயத்தங்கள் நடந்து வருகிறது. தென் சீனாவின் அருகே இருக்கும் கடல் பகுதியை மலேசியா, வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடுகிறது. இங்கு அதிக அளவில் இருக்கும் எண்ணெய் வளம்தான் இதற்கு காரணம். காரணம் காரணம் எண்ணெய் ஏற்கனவே இங்கு மலேசியாவும் எண்ணெய் எடுக்கிறது. சீனாவும் எண்ணெய் எடுக்கிறது. இந்த கடல் பகுதியை மொத்தமாக கட்டுப்படுத்த சீனா முயன்று கொண்டு இருக்கிறது. ஆனால் அதற்கு தடையாக அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு உதவி செய்து, சீனாவிற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. முக்கியமாக அமெரிக்கா சீனாவிற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் மலேசியாவிற்கு ஆதரவு அளித்து வருகிறது. பதற்றம் அதிகரிக்கும் பதற்றம் கடந்த ஒரு வாரமாக இந்த பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் திடீரென்று தென் சீன கடல் பகுதியில் சீனா போர்கப்பல்களை குவித்ததுதான். மலேசியாவை அச்சுறுத்தும் வகையில் சீனா தனது போர் கப்பல்களை, மலேசியாவின் எண்ணெய் கிணறுகளுக்கு அருகே கொண்டு சென்றது. கொரோனாவால் நலிவடைந்து இருக்கும் அமெரிக்கா எதுவும் கேட்காது என்ற தைரியத்தில் சீனா இப்படி செய்தது. ரோந்து போர் கப்பல்கள் இந்த கடல் எல்லைக்குள் சீனாவின் Haiyang Dizhi போர் கப்பல்கள் கடந்த ஒரு வாரமாக சென்று ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் சீனாவை உடனே அடக்கும் வகையில் அமெரிக்கா தனது USS Bunker Hill மற்றும் USS Barry எனப்படும் போர் கப்பல்களை சீன எல்லைக்கு அனுப்பி வைத்தது. அதோடு அமெரிக்காவுடன் மலேசியாவின் போர் கப்பல்களும் கூட்டு சேர்ந்தது. பின் வியட்நாம் போர் கப்பலும் அமெரிக்காவுடன் சேர்ந்து தற்போது அங்கே ரோந்து பணிகளை கவனித்து வருகிறது. அமெரிக்க கப்பலுடன் ஆஸ்திரேலியாவின் போர் கப்பலும் இணைந்துள்ளது. போர் விமானம் ஜெட் விமானம் இந்த நான்கு நாட்டு போர் கப்பல்களும் சீனாவை நெருங்கி உள்ளது. இந்த நிலையில்தான் நேற்று அதிகாலை இந்த கடல் பகுதிக்கு சீனா தனது போர் விமானங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் போர் கப்பல்களை அடக்கும் விதமாக சீனா இந்த போர் விமானங்களை அனுப்பி உள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை தற்போது வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. விரட்டினோம் விரட்டி அடித்தோம் அதில், எங்கள் கடல் எல்லையில் சுற்றி வந்த அமெரிக்காவின் போர் கப்பல்களை விரட்டி முடித்துவிட்டோம். எங்கள் எல்லையில் நுழைந்து அவர்கள் பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு இருந்தது. ஹாங்காங்கில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் இப்படி செய்தனர். சர்வதேச விதிகளுக்கு எதிராக அமெரிக்கா இப்படி செயல்பட்டுள்ளது. எங்களுக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்து ஏற்படுத்தும் வகையில் இப்படி செய்கிறது. சீண்டுகிறது அமெரிக்கா சீண்டுகிறது எங்களை சீண்டும் வகையில் அமெரிக்கா செயல்படுகிறது. அமெரிக்கா தனது ராணுவத்தை எப்படி எல்லாம் முறையின்றி பயன்படுத்தும் என்பதற்கு இதுதான் உதாரணம். கொரோனா காரணமாக உலகமே முடங்கி உள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் அமெரிக்கா தங்கள் நாடு மீது கவனம் செலுத்த வேண்டும். அதை விடுத்து இப்படி போர் கப்பல்களை அனுப்ப கூடாது. நாங்கள் எப்போதும் கவனமாக இருப்போம். அதிக கவனம் சீன கடல் எல்லையில் யாரையும் நுழைய நாங்கள் விட மாட்டோம். நாங்கள் எப்போதும் மிக கவனமாக உறுதியாக இருப்போம். அமெரிக்காவை எங்கள் எல்லையில் அத்துமீற விட மாட்டோம். எங்கள் நாட்டின் அமைதிக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளக்க விட மாட்டோம். நாங்கள் மிக அதிகமாக கவனத்துடன் இருக்கிறோம் என்று சீனா கூறியுள்ளது. இதனால் அமெரிக்கா, சீனா இடையே போர் ஏற்படுவதற்கான அச்சம் ஏற்பட்டுள்ளது.https://youtu.be/knQwfIKq0FM

No comments: