Saturday 2 May 2020

கோஷங்கள் முழங்க.. ஹீரோ போல கம் பேக் கொடுத்த கிம் ஜோங் உன்.. 21 நாட்கள் எங்கே போனார்.. என்ன செய்தார்?

பியாங்யாங்: 21 நாட்கள் காணாமல் போய் இருந்த வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் என்ன செய்தார்? எங்கே போயிருந்தார் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி... திரும்ப வருகிறார் கிம் | Kim Jong Un shows up பெரும் பரபரப்பிற்கும், வதந்திகளுக்கும் இடையே கிம் ஜோங் உன் குறித்த முக்கியமான அறிவிப்பு இன்று அதிகாலை வெளியானது. கடந்த மூன்று வாரமாக வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னின் உடல் நிலை குறித்து தொடர்ந்து சந்தேகங்கள் வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தது. அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக செய்திகள் பரவியது. வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் மிக மோசமான உடல்நிலையுடன் இருப்பதாக அமெரிக்கா செய்தி ஊடகமான சிஎன்என் கடந்த வாரம் செய்தி வெளியிட்டு இருந்தது. இதுதான் அவரின் உடல்நிலை குறித்த சந்தேகங்களுக்கு காரணம் ஆகும். என்னாச்சு உடம்புக்கு கிம்.. வெயிட் போட்டாச்சு.. சிரிப்பையும் காணோம்.. பக்கத்துல நிக்குற பொண்ணு யாரு? மோசம் மோசமான உடல்நிலை கிம் ஜோங் உன்னின் உடல்நிலை மிக மோசமடைந்து இருக்கிறது, இதய அறுவை சிகிச்சை ஒன்றின் காரணமாக அவரின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது என்று செய்தி வெளியிட்டு இருந்தது. கிம் ஜோங் உன்னுக்கு கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு முதல் நாளான 11ம் தேதிதான் கிம் ஜோங் உன் மாயமானார். அதில் இருந்து தொடர்ந்து வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தது. நிறைய வதந்திகள் மோசமான வதந்திகள் அதன்படி கிம் ஜோங் உன் மூளை சாவு அடைந்துவிட்டார். மிக மோசமான உடல்நிலையுடன் இருக்கிறார். அவர் எப்போது வேண்டுமானாலும் பலியாகலாம் என்றெல்லாம் கூட செய்திகள் வெளியானது. அவர் இறந்துவிட்டார் என்றும் கூட செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்திகள் அனைத்திற்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் மீண்டும் வந்து இருக்கிறார். வந்தார் மீண்டும் வந்தார் ஆம் இன்று அதிகாலை கிம் ஜோங் உன் மீண்டும் வந்தார். வடகொரியாவின் உழைப்பாளர் தினம் மற்றும் அங்கு இருக்கும் உர தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவிற்காக அவர் வெளியே வந்து இருக்கிறார். பியாங்யாங் நகரத்தில் இருக்கும் சன்சோன் போஸ்பாடிக் உர தொழிற்சாலையை திறப்பதற்காக அவர் வந்தார். அங்கிருக்கும் அதிகாரிகளுடன் சில நிமிடம் அவர் உரையாடினார். பின் ரிப்பனை கட் செய்து கட்டிடத்தை திறந்து வைத்தார். கோஷம் கோஷங்கள் எழும்பியது கிம் ஜோங் உன் இந்த நிகழ்ச்சிக்கு தன்னுடைய காரில்தான் வந்தார். ஆனால் எங்கிருந்து வந்தார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. அவர் உள்ளே வரும் போதே அங்கு பெரிய அளவில் கோஷங்கள் எழுந்தது. மக்கள் ஆரவாரமாக கோஷங்களை எழுப்பினார்கள். அவரை வரவேற்க பெரிய அளவில் பலூன்கள் பறக்க விடப்பட்டு இருந்தது. ஹீரோ போல கிம் ஜோங் உன் இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து இருந்தார். மக்களுக்கு தெரியும் மக்களுக்கு எல்லாம் தெரியும் கிம் ஜோங் உன் இப்படி மீண்டும் வருவார் என்று வடகொரியாவின் எல்லோருக்கும் தெரியும் என்கிறார்கள். அதனால் தென் கொரியா இதற்கு முன்பே அவர் நன்றாக இருக்கிறார் என்று அறிவித்து இருந்தது. அதேபோல் அந்நாட்டு மக்கள் இதனால் வெளிநாட்டு ஊடகங்கள் எதற்கும் பேட்டி கொடுக்கவில்லை. தென் கொரியாவில் இருக்கும் சொந்தங்களுக்கு கூட கிம் குறித்து, வடகொரியா மக்கள் எதுவும் சொல்லாமல் அமைதி காத்தது இதனால்தான் என்கிறார்கள். விமானத்தில் வரவில்லை விமானத்தில் எங்கும் செல்லவில்லை இதில் சில சுவாரசியமான விஷயங்கள் நடந்துள்ளது. கிம் ஜோங் உன் இத்தனை நாட்கள் வொன்சான் பகுதியில் சொகுசு பங்களாவில் வசித்து வந்துள்ளார். அவர் அங்கிருந்து ரயில் மூலமே பியாங்யாங் வந்துள்ளார். அவரின் விமானம் ஒரு மாதமாக பியாங் யாங் பகுதியில் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இத்தனை நாட்களாக வொன்சான் பகுதியில் இருந்த கிம்மின் ரயில் இப்போது அங்கு இல்லை என்ற தகவலும் இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது. மூன்று விஷயங்கள் மூன்று விஷயங்கள் பரவுகிறது கிம் ஜோங் உன் 21 நாட்கள் என்ன செய்தார் என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக நிறைய சந்தேகங்கள் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. #Kim_Jong_Un_shows_up

No comments: