Friday 1 May 2020

உலகளவில் கொரோனாவால் மொத்தம் 2,30,000 பேர் மரணம்.. அமெரிக்கா, இங்கிலாந்தில் நிலைமை படுமோசம்...

ஜெனிவா: கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 230000 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 33 லட்சத்தை கடந்ததுள்ளது. குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 10லட்சத்து 39 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கொரானா தடுப்பூசி போட்டு பார்க்கிறது அமெரிக்கா சீனாவில் தோன்றி கொரோனா வைரஸ் தொற்று உலகின் பல நாடுகளை கடுமையாக பாதித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ரஷ்யா, சீனா, துருக்கி, ஈரான், பிரேசில் என பல நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மீள வழி தெரியாமல் தவித்து வருகின்றன. உலகின் வல்லரசான அமெரிக்கா கொரோனா பாதிப்பால் உலகின் மற்ற எல்லா நாடுகளையும் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொத்துக்கொத்தாக அதிகரித்து வரும் மரணங்கள் மக்களை பீதிக்குள்ளாக்கி உள்ளது. பிணங்களை அடக்கம் செய்வதற்கு நேரம் இல்லாத அளவுக்கு உடல்கள் குவிந்து வருகிறது. இங்கிலாந்திலும் உயிரிழப்பு மிக மோசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் 3,3,04,140 பேர் கொரோனாவால் இன்று காலை நிலவரப்படி பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 2,33,829 ஆக அதிகரித்துள்ளது. குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை என்பது 1,0,39,055 ஆக உயர்ந்துள்ளது. உலகிலேயே மிக அதிகமாக அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் மட்டும் 2,201 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அங்கு கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 63,856 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் நேற்று ஒரு நாளில் 674 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26,771 உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 11 குழந்தைகள்.. மொத்தமாக 142 குழந்தைகள்.. தமிழகத்தில் தீவிரம் அடையும் கொரோனா பாதிப்பு! இத்தாலியில் நேற்று 285 பேரும், ஸபெயினில் 268 பேரும், பிரான்சில் 289 பேரும் ஜெர்மனியில் 156 பேரும் ரஷ்யாவில் 101 பேரும்,, பிரேசிலில் 390 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ள #SL_TAMIL_MUSLIM_TV_NETWORK by-M.WASEEM.T.M

No comments: