-
👉ஒவ்வொரு நாளும் மூன்று மணித்தியாலங்கள்... அவற்றின் சிறப்பை இழந்துவிடாதீர்கள்.... எந்த வேலையாக இருந்தாலும் நீங்கள் அந்த நேரங்களை பயன்படுத்திக் கொள்வதில் பக்குவமாக இருங்கள்.... ஒரு நாளைக்கு மூன்று மணித்தியாலங்கள் மாத்திரமே.... மாத இறுதியில் கூட்டுத்தொகை 90 மணித்தியாலங்கள் 1️⃣முதலாவது நேரம் *இப்தாருடைய நேரம்* ... இப்தாருக்கான ஏற்பாடுகளை நேரகாலத்துடனே செய்துகொள்ளுங்கள்.... அந்த நேரத்தை துஆவுக்காக மட்டுமே ஒதுக்குங்கள்.... 👉ஏனெனில் நோன்பாளிகளின் துஆ மறுக்கப்படமாட்டாது. உங்களுக்காக, உங்கள் நெருங்கிய உறவுகளுக்காக துஆ கேளுங்கள்.... ஒட்டு மொத்த முழு உலக முஸ்லிம்களுக்காகவும் துஆ செய்யுங்கள் மரணித்த முஸ்லீம்களையும் மறந்துவிடாதீர்கள்.... அவர்கள் உங்களின் துஆவிற்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள்...... தன் சகோதர முஸ்லிம்களுக்காக துஆ செய்பவர்களுக்கு மலக்குமார்கள் துஆ செய்வார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம் 2️⃣இரண்டாவது நேரம் *இரவின் கடைசிப் பகுதி* அந்த நேரத்தில் இறைவனுடன் தனிமையாக உறையாடுங்கள்.... அவன் உங்களைப் பார்த்து கேட்கிறான்.... என்னை அழைப்பவர்கள் யாரேனும் உண்டா? அவர்களின் அழைப்புக்கு நான் பதிலளிப்பேன்.. என்னிடம் (அவர்களின் தேவைகளை) கேட்பவர்கள் யாராலும் இருக்கிறார்களா? ... அவர்களுக்கு நான் (அவர்கள் கேட்பதை) கொடுப்பேன்.... என்னிடம் பாவ மன்னிப்பு கேட்போர் உண்டா?... அவர்களுக்கு நான் அவர்களுடைய பாவங்களை மன்னிப்பேன்.... எனவே அந்த நேரத்தில் அதிகமாக இஸ்திஃபார் செய்யுங்கள்... 3️⃣மூன்றாவது நேரம். *சுபஹ் தொழுகை முதல் சூரியன் உதிக்கும் வரை* சுபஹ் தொழுகை முதல் சூரியன் உதிக்கும் வரை நீங்கள் தொழுத பாயில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.... அந்த நேரத்தில் குர்ஆன் ஓதுதல், திக்ர் போன்ற விடயங்களில் அதிகமதிகம் ஈடுபடுங்கள் 🍂அவை 90 மணித்தியாலங்கள் மாத்திரமே.... மற்றைய நேரங்களில் திக்ர் செய்யுங்கள்... இயலுமானவரை குர்ஆன் ஓதுங்கள். கோல், பொய், புறம், கேலிக்கை போன்ற பாவமான விடயங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்... அவை உங்கள் நோன்பின் நன்மைகளை அழித்துவிடும்.... பர்ளான தொழுகைகளை அவற்றின் ஆரம்ப நேரங்களில் தொழுவதில் பேனுதலாக இருங்கள்.. சுன்னத்தான தொழுகைகளிலும் ஈடுபடுங்கள்.... வெறுமனே 18/17 நாட்கள்..... அவை அவசரமாக முடிந்துவிடும்..... எனவே நேர காலத்தை உரிய முறையில் பயன்படுத்துவோம்
Saturday, 9 May 2020
ரமழானில் மூன்று நேரங்கள்√ ||அவற்றை தவற விடாது பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்....√
Wednesday, 6 May 2020
இலங்கையில் மிக வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... தொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகாரிப்பு! எவ்வளவு தெரியுமா?

Tuesday, 5 May 2020
*கொலன்னாவை, இராஜகிரிய, கண்டி – கொலபிஸ்ஸ பிரதேசங்களைச் சேர்ந்த 138 பேர் தனிமைப்படுத்தல்!*

Monday, 4 May 2020
சவூதியினால் 150 மெற்றிக்தொன் பேரீச்சம் பழங்கள் இலங்கைக்கு அன்பளிப்பு.... !!!!!!




தற்கொலை குண்டுதாரி சஹ்ரானை அழைத்து போதனை நடத்திய பொறுப்பாளர் கைது! வெளியான பல தகவல்கள்...... #Easter_bomb_blast



உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் புத்தளம் பிரதேசத்தின் அமைப்பொன்றும் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் சி.ஐ.டி. தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டிருந்த நிலையில் அதன் பொறுப்பாளராக செயற்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய தினம் புத்தளம் - கற்பிட்டி, 4 ஆம் குறுக்குத் தெரு பகுதிக்கு சென்ற சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு குறித்த நபரை அவரது வதிவிடத்தில் வைத்து பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்ததாகவும், கைது செய்யப்பட்ட நபர் சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடிக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார். குறித்த நபர் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினை நடாத்தி வந்துள்ள நிலையில், அதன் நிதி ஊடாக அடிப்படைவாதத்தை போதனை செய்ய பயிற்சி நெறிகளை முன்னெடுத்துள்ளதாகவும், அதற்காக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை நடாத்திய குண்டுதாரிகள் வந்து சென்றுள்ளமையும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார். அவ்வாறு நடாத்தப்பட்ட பயிற்சி நெறிகளின் போது பயிற்சி நெறிகளுக்கு பொறுப்பாளராகவும் குறித்த நபரே செயற்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி. தெரிவித்தது. புத்தளம் , மதுரங்குளி, அசார் நகரை மையப்படுத்தி இயங்கியதாக கூறப்படும் மேற்படி அரச சார்பற்ற நிறுவனம் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இந்த அரச சார்பற்ற நிறுவனத்தின் பொறுப்பாளரால் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள அடிப்படைவாத போதனை முகாம்களில், பயங்கரவாதி சஹ்ரான், சங்ரில்லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரி மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட் மற்றும் சினமன் கிரான்ட் ஹோட்டல் தற்கொலைதாரி மொஹம்மட் இப்ராஹீம் இல்ஹாம் அஹமட் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டுள்ளதக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகள் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவின் கீழ் இடம்பெற்று வருகின்றது #easter_bomb_blast_srilanka #zaharan
மே 11 இல் ஊரடங்கு தளர்வு - ஜூன் 1 இல் பாடசாலைகள் மீண்டும் திறப்பு.........





இலங்கையில் கொரோனாவால் இறந்தவரின் ஊரில் தங்க நிறத்தில் விசித்திர வெளவால் ....


சின்னத்திரை நடிகை திடீரென விவாகரத்து.. காதல் கணவரை பிரிந்தார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
Sunday, 3 May 2020
20 ஆண்டுகளுக்குப் பின் கலிபோர்னியாவை பயங்கர நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Earthquake shocks California 20 years later Subsequent earthquakes have caused great damage.








ரமழான் பகல் நேரங்களில் ஏற்படும் நெஞ்செரிவை எவ்வாறு தவிர்ப்பது? – Dr.Muhammad Abdullah Jazeem M.B.B.S, M.R.C.G.P – நோன்பு நோற்றாலானது உடல் உள ஆரோக்கியமிகு செயலாகும்' Like|fallow|share|



கொரோனாவுக்கு நடுவே .. வங்கதேசத்தில் பசி பட்டினியுடன் தஞ்சமடைந்த 40 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் By m.waseem.t.m
பயோ வார் பழியை சுமந்த நாடு.. கொரோனாவால் ரஷ்யாவில் ஒரே நாளில் திருப்பம்.. உளவு தேசத்தின் பரிதாப நிலை! By m.waseem.t.m
Subscribe to:
Posts (Atom)