Saturday, 21 March 2020
The Prophet’s Mosque is closed for the first time in 14 centuries, since the time of the Prophet’s mission of Islam. Ya Allah ..
14 நூற்றுக்களில் முதல் முறையாக பூலோகத்தின் சுவனபதி "மஸ்ஜிதுல் நபவீ" மாமதீனாஹ் கதவுகள் மூடப்பட்டுள்ளது
The Prophet’s Mosque is closed for the first time in 14 centuries, since the time of the Prophet’s mission of Islam. Ya Allah 😭
غبار المدينة شفاء
“மதீனத்துப் புழுதி நோய் நிவாரணியாகும் என்று ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வசல்லம் அவர்கள் நவின்றார்கள்.”
அந்த புழுதியை
நுகர்ந்தாலே போதுமே
அங்கு மரணம் வந்தாலும்
எங்கள் எம்பெருமானார்
ரஸூலே ஹரீம்
ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்
ஷபாஅத் "குப்றா" பெற்று
மறுமையில்
ஜெயம் பெறுவேனே
இறைவா..
ஈமான் இழந்து
துருப்படித்த இதயத்தை கூட
தூய்மை படுத்தும் நகரமல்லவா
மாமதீனாஹ் நகரம்..
இன்று உங்களை
தனிமைப்படுத்தி
உயிர் காக்கும்
நப்ஷை தேடும்
ஈமானாகிவிட்டதே
மனிதனின் உள்ளம்
இறைவா..
எம்பெருமானார் நாயகம்
ஆசைகொண்ட நகரமல்லவா..
மாமதீனாஹ் நகரம்
எங்கள்
கண்மணியாம் நாயகம்
எத்திசையிலிருந்து வந்தாலும்
மாமதீனாஹ் நகரின்
எல்லைச் சுவற்றைக் கண்டால்
ஒட்டகத்தை வேகமாக
ஓட்டிச் செல்வார்கலாம்
மா மதீனாஹ் எல்லைக்குள்..
இன்று எல்லைகள்
பூட்டப்படுகிறதே..
இறைவா...
எழுதும்போது
என் இதய துடிப்பும்
மாமதீனாஹ்
என்றுதான் துடிக்கிறதே
நாயகமே யா ரஸூலல்லாஹ்
எம்பெருமானாரின் தோழர்
உமர் நாயகம் மரணிக்க
ஆசைகொண்ட நகரமல்லவா
மாமதீனாஹ் நகரம்
இன்று
மரணத்தின் பயத்தினால்
எல்லைகள் பூட்டப்பட்டதே
இறைவா..
ஸுப்ஹானல்லாஹ்😓
மதீனாவில் மரணிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அங்கு மரணித்து விடுங்கள் ஏனெனில் அங்கு மரணிப்பவருக்கு நான் ஷபாஅத் செய்வேன். 'உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார். ”இறைவா! உன் பாதையில் வீரமரணம் அடையும் பாக்கியத்தை எனக்கு வழங்கு! என்னுடைய மரணத்தை உன் தூதருடைய ஊரில் ஏற்படுத்து'.
ஷஹீஹ் புகாரி 1890
ஸல்லல்லாஹு அலா முஹம்மத்💚 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்❤
✍ https://www.facebook.com/tamiltvstudio
https://tamiltvstudio.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment