Wednesday, 25 March 2020
#CORONA_COVID19 தயாள குணமுடைய ஏழை சேனை விவசாயி.. #covid19
தயாள குணமுடைய ஏழை சேனை விவசாயி
இன்று 25/03/2020 விடியற் காலை நாட்டுமறக்கறி வாங்குவோமென்று ஒருவகையாக ஊடறுத்துக்கொண்டு அட்டப்பள்ளம் போனேன்
சேனை விவசாயி ஒரவர் கத்தறிக்காய் குவியலென்றை வைத்திருந்தார் கத்றிக்காய் தாருங்களேன் என்றேன் பையை எடுத்து அள்ளிப்போட்டார்
இதோ பிடிங்களென்றார் எவ்வளவு மாமா என்றேன் துஆ கெய்யுங்கள் என்றார்
மக்களின் இக்கட்டான இந்த நிலலையில்
ஏதாவது உதவி செய்ய ஆசைப்படுகிறேன் என்னிடத்தில் பணம் இல்லை அதனால் எனது இச் சிறிய சேனையில் இன்று பறித்த கத்தறிக்காய்களை மக்களுக்கு தர்மம் செய்கின்றேன்"என்ற வார்த்தை ஆனந்தக்கண்ணீரை வரவழைத்தது.
நிறைவான துஆ செய்துவிட்டு நகர்ந்தேன்
#பிறர் தேவைகளில் இவ் இக்கட்டான காலத்தில் பங்குகொள்ளாமல் பதுக்கும் வியாபாரிகளை விடவும் பணத்தை வங்கிகளில் பதுக்கிவைத்துக்கொண்டு தான் மட்டும் உண்டுமகிழும் தான் திண்ணிகளைவிடவும் இவர்போன்ற விவசாயிகள் நாளை மறுமையில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பார்கள்....
ஆமீன்
Https://tamiltvstudio.blogspot.com.
Https://facebook.com/tamiltvstudio/
https://youtu.be/J2xCoNhS-n4
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment