வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் 21 நாட்களுக்கு பின் இன்று மீண்டும் மக்கள் முன்னிலையில் தோன்றினார். அவரின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவிய நிலையில் இன்று அவர் மக்கள் முன்னிலையில் தோன்றினார். வடகொரியாவின் உழைப்பாளர் தினம் மற்றும் அங்கு இருக்கும் உர தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவிற்காக அவர் வெளியே வந்து இருக்கிறார்.
பியாங்யாங் நகரத்தில் இருக்கும் சன்சோன் போஸ்பாடிக் உர தொழிற்சாலையை திறப்பதற்காக அவர் வந்தார். அங்கிருக்கும் அதிகாரிகளுடன் சில நிமிடம் அவர் உரையாடினார். பின் ரிப்பனை கட் செய்து கட்டிடத்தை திறந்து வைத்தார்.
புகைப்படம்
புகைப்படம் வெளியானது
இந்த நிலையில் கிம் உன் குறித்து காலையில் புகைப்படங்கள் மட்டும் வெளியாகி இருந்த நிலையில் தற்போது வீடியோவும் வெளியாகி உள்ளது. காலையில் புகைப்படங்கள் வெளியான போது, பலரும் அந்த புகைப்படங்கள் குறித்து சந்தேகம் எழுப்பினார்கள். அந்த புகைப்படங்களின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதை பழைய புகைப்படங்கள் என்று கூறினார்கள். அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
வீடியோ
வீடியோ வெளியானது
இந்த வீடியோ கிம் மிகவும் ஆரோக்கியமாக காணப்படுகிறது. மிகவும் உறுதியாக திடமாக அதே சமயம் வேகமாக வீறுநடை போட்டு கிம் நடந்து வருகிறார். கிம்மை அங்கு மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்பதும். கிம் முகம் முழுக்க சிரிப்புடன் மக்களுடன் பேசுவதும் பெரிய வைரலாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கிம் என்ன பேசினார் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. அதில், இந்த உர தொழிற்சாலை வடகொரியாவின் வளர்ச்சியில் பெரிய பங்கு வகிக்கும்.
பேசினார்
என்ன பேசினார்
வடகொரியா வரலாற்றில் இந்த தொழிற்சாலை முக்கிய மைல் கல்லாக இருக்கும். நாம் புதிய நாட்களை சந்திக்க இருக்கிறோம். நம்முடைய பொருளாதார பலத்தை பறைசாற்றும் புரட்சிகரமான இடமாக இது இருக்க போகிறோம். நம் நாட்டின் சாதனைகளில் ஒன்றாகவும், அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் இது இருக்கும். எனக்கு இங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பெரிய வரவேற்புக்கு நன்றி.
இளைஞர்கள்
இளைஞர்கள் பலர்
இங்கே பணியாற்றிய எல்லோருக்கும் நன்றிகள். இந்த பணியாளர்கள் எல்லோருக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு இங்கு வந்த பின்தான் திருப்தியாக இருக்கிறது. இங்கே பல இளைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். நாம் இது போன்ற இளைஞர்களுக்கு வழி விட வேண்டும், என்று கிம் கூறியுள்ளார். ஆனால் தான் 21 நாட்களாக தலைமறைவானது குறித்தும், எங்கே சென்றார் என்பது குறித்தும் கிம் எதுவும் பேசவில்லை.
Saturday, 2 May 2020
துரத்தி அடித்துவிட்டோம்.. அமெரிக்க போர் கப்பலை விரட்ட ஜெட்களை அனுப்பிய சீனா.. போருக்கு தயார் ஆகிறதா?







கோஷங்கள் முழங்க.. ஹீரோ போல கம் பேக் கொடுத்த கிம் ஜோங் உன்.. 21 நாட்கள் எங்கே போனார்.. என்ன செய்தார்?
பியாங்யாங்: 21 நாட்கள் காணாமல் போய் இருந்த வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் என்ன செய்தார்? எங்கே போயிருந்தார் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி... திரும்ப வருகிறார் கிம் | Kim Jong Un shows up
பெரும் பரபரப்பிற்கும், வதந்திகளுக்கும் இடையே கிம் ஜோங் உன் குறித்த முக்கியமான அறிவிப்பு இன்று அதிகாலை வெளியானது. கடந்த மூன்று வாரமாக வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னின் உடல் நிலை குறித்து தொடர்ந்து சந்தேகங்கள் வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தது. அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக செய்திகள் பரவியது.
வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் மிக மோசமான உடல்நிலையுடன் இருப்பதாக அமெரிக்கா செய்தி ஊடகமான சிஎன்என் கடந்த வாரம் செய்தி வெளியிட்டு இருந்தது. இதுதான் அவரின் உடல்நிலை குறித்த சந்தேகங்களுக்கு காரணம் ஆகும்.
என்னாச்சு உடம்புக்கு கிம்.. வெயிட் போட்டாச்சு.. சிரிப்பையும் காணோம்.. பக்கத்துல நிக்குற பொண்ணு யாரு?
மோசம்
மோசமான உடல்நிலை
கிம் ஜோங் உன்னின் உடல்நிலை மிக மோசமடைந்து இருக்கிறது, இதய அறுவை சிகிச்சை ஒன்றின் காரணமாக அவரின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது என்று செய்தி வெளியிட்டு இருந்தது. கிம் ஜோங் உன்னுக்கு கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு முதல் நாளான 11ம் தேதிதான் கிம் ஜோங் உன் மாயமானார். அதில் இருந்து தொடர்ந்து வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தது.
நிறைய வதந்திகள்
மோசமான வதந்திகள்
அதன்படி கிம் ஜோங் உன் மூளை சாவு அடைந்துவிட்டார். மிக மோசமான உடல்நிலையுடன் இருக்கிறார். அவர் எப்போது வேண்டுமானாலும் பலியாகலாம் என்றெல்லாம் கூட செய்திகள் வெளியானது. அவர் இறந்துவிட்டார் என்றும் கூட செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்திகள் அனைத்திற்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் மீண்டும் வந்து இருக்கிறார்.
வந்தார்
மீண்டும் வந்தார்
ஆம் இன்று அதிகாலை கிம் ஜோங் உன் மீண்டும் வந்தார். வடகொரியாவின் உழைப்பாளர் தினம் மற்றும் அங்கு இருக்கும் உர தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவிற்காக அவர் வெளியே வந்து இருக்கிறார். பியாங்யாங் நகரத்தில் இருக்கும் சன்சோன் போஸ்பாடிக் உர தொழிற்சாலையை திறப்பதற்காக அவர் வந்தார். அங்கிருக்கும் அதிகாரிகளுடன் சில நிமிடம் அவர் உரையாடினார். பின் ரிப்பனை கட் செய்து கட்டிடத்தை திறந்து வைத்தார்.
கோஷம்
கோஷங்கள் எழும்பியது
கிம் ஜோங் உன் இந்த நிகழ்ச்சிக்கு தன்னுடைய காரில்தான் வந்தார். ஆனால் எங்கிருந்து வந்தார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. அவர் உள்ளே வரும் போதே அங்கு பெரிய அளவில் கோஷங்கள் எழுந்தது. மக்கள் ஆரவாரமாக கோஷங்களை எழுப்பினார்கள். அவரை வரவேற்க பெரிய அளவில் பலூன்கள் பறக்க விடப்பட்டு இருந்தது. ஹீரோ போல கிம் ஜோங் உன் இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்து இருந்தார்.
மக்களுக்கு தெரியும்
மக்களுக்கு எல்லாம் தெரியும்
கிம் ஜோங் உன் இப்படி மீண்டும் வருவார் என்று வடகொரியாவின் எல்லோருக்கும் தெரியும் என்கிறார்கள். அதனால் தென் கொரியா இதற்கு முன்பே அவர் நன்றாக இருக்கிறார் என்று அறிவித்து இருந்தது. அதேபோல் அந்நாட்டு மக்கள் இதனால் வெளிநாட்டு ஊடகங்கள் எதற்கும் பேட்டி கொடுக்கவில்லை. தென் கொரியாவில் இருக்கும் சொந்தங்களுக்கு கூட கிம் குறித்து, வடகொரியா மக்கள் எதுவும் சொல்லாமல் அமைதி காத்தது இதனால்தான் என்கிறார்கள்.
விமானத்தில் வரவில்லை
விமானத்தில் எங்கும் செல்லவில்லை
இதில் சில சுவாரசியமான விஷயங்கள் நடந்துள்ளது. கிம் ஜோங் உன் இத்தனை நாட்கள் வொன்சான் பகுதியில் சொகுசு பங்களாவில் வசித்து வந்துள்ளார். அவர் அங்கிருந்து ரயில் மூலமே பியாங்யாங் வந்துள்ளார். அவரின் விமானம் ஒரு மாதமாக பியாங் யாங் பகுதியில் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இத்தனை நாட்களாக வொன்சான் பகுதியில் இருந்த கிம்மின் ரயில் இப்போது அங்கு இல்லை என்ற தகவலும் இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.
மூன்று விஷயங்கள்
மூன்று விஷயங்கள் பரவுகிறது
கிம் ஜோங் உன் 21 நாட்கள் என்ன செய்தார் என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக நிறைய சந்தேகங்கள் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது.
#
Kim_Jong_Un_shows_up





Friday, 1 May 2020
#BREAKINGNEWS_SRILANKA
Min:-ROUF_HAKEEM Reed & share share share
கொவிட் - 19 தொற்று நோய் நிலைமை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதோடு, இன ரீதியாக இலக்குவைத்து ஒரு சமூகத்தின் மீது பழி சுமத்தும் வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், நாட்டில் குறிப்பாக தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருபதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடும் விசனம் தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் அனுஷ்டிக்கப்படும் மே தினம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இஸ்லாம் தொழிலாளர்களின் உரிமைகளை சரிவர வழங்கியிருப்பதனால், முஸ்லிம் காங்கிரஸ் ஆண்டு தோறும் மே தினத்தைக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொள்ளவில்லை.
ஏனென்றால், தொழிலாளர்களின் வியர்வை உலர்வதற்கு முன்னர் அவர்களது ஊதியத்தை வழங்கிவிடுமாறு இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறிய நபிமொழி சுனன் இப்னு மாஜா கிரந்தத்தில் (2443) பதிவாகியுள்ளது.
கொவிட் -19 நோய்த் தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் தொழிலாளர்கள் தொழில் வாய்ப்பின்மை, பணிக் குறைப்பு, சம்பளம் வழங்கப்படாமை போன்ற பல்வேறு காரணிகளால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில்கூட அரசாங்கத்திடம் மானியம் கேட்டு குரல் எழுப்பும் நிலைமைக்கு தொழிலாளர்கள் ஆளாகியுள்ளனர்.
இலங்கையைப் பொறுத்தவரை கொவிட் -19 விவகாரம் கையாளப்படும் விதம் நிலைமையை மிகவும் சிக்கலாக்கியுள்ளது. அரசியல் உள்நோக்கங்களோடு, நோய் பரவல் பற்றிய அச்ச உணர்வு மேலோங்கியுள்ளதாகத் தோன்றுகிறது. மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டிருக்கின்றார்கள். பல மாவட்டங்களில் அவர்களது நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டபோதிலும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை உட்பட சில மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு ஏறத்தாழ ஒன்றரை மாதங்களாக நீடிக்கப்பட்டிருப்பதன் விளைவாக அன்றாடம் தொழிலுக்குச் செல்வோரும், நாளாந்தம் கூலித் தொழில் புரிவோரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக முஸ்லிம்கள் செறிவாக வசிக்கும் அக்குறணை, அட்டுலுகம போன்ற பிரதேசங்களில் ஓரிருவர் கொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டதற்காக, அவ்வாறான பிரதேசங்களிலிருந்து ஏராளமானோர் தனிமைப்படுத்தல் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அக்குறணையில் 22 கிராம சேவகர் பிரிவுகளில் வசிப்போர் முடக்கப்பட்டுள்ளதனால் அங்குள்ளோரின் வாழ்வாதாரம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் தனவந்தர்கள் வழங்கிவரும் நிவாரண உதவிகளைத் தவிர அரசாங்கத்தினால் உரிய கவனஞ் செலுத்தப்படவில்லை.
நாட்டில் பொதுவாக அரசாங்கத்தினால் வழங்கப்படுவதாகக் கூறப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவுக்காக அப்பாவி பொதுமக்கள் தங்களது தன்மானம், சமூக அந்தஸ்து என்பனவற்றை இழந்து நீண்ட வரிசைகளில் கால் கடுக்க தவம் கிடக்க வேண்டிய நிலைமை ஊடகங்களில்கூட சர்வசாதாரணமகக் காண்பிக்கப்படுகிறது.
பாராளுமன்றத் தேர்தல் சர்ச்சைக்குள்ளாகி சட்டம் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடிக்குள் நாடு சிக்குண்டுள்ள நிலையில் கொவிட் - 19 நோய் நிலைமையை அரசியல் உள்நோக்கங்களுடனும், இனவாதச் சிந்தனையுடனும் தொடர்ந்து அணுகுவது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பையே சீர்குலைத்துவிடும் அபாயத்தை ஏற்படுத்தும்.
அத்துடன் தொழில் இழப்பு வேலையில்லாத் திண்டாட்டம் என்பவற்றின் விளைவாக பொதுமக்களின் வாழ்வாதாரம் முன்னெப்போதும் இல்லாதவாறு பாதிக்கப்படுவதற்கான அறிகுறிகள் இப்பொழுதே தென்படுகின்றன.
ஊடகப் பிரிவு
- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் -
#Rouf_hakeem
உலகளவில் கொரோனாவால் மொத்தம் 2,30,000 பேர் மரணம்.. அமெரிக்கா, இங்கிலாந்தில் நிலைமை படுமோசம்...
ஜெனிவா: கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 230000 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 33 லட்சத்தை கடந்ததுள்ளது. குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 10லட்சத்து 39 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
கொரானா தடுப்பூசி போட்டு பார்க்கிறது அமெரிக்கா
சீனாவில் தோன்றி கொரோனா வைரஸ் தொற்று உலகின் பல நாடுகளை கடுமையாக பாதித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ரஷ்யா, சீனா, துருக்கி, ஈரான், பிரேசில் என பல நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மீள வழி தெரியாமல் தவித்து வருகின்றன.
உலகின் வல்லரசான அமெரிக்கா கொரோனா பாதிப்பால் உலகின் மற்ற எல்லா நாடுகளையும் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொத்துக்கொத்தாக அதிகரித்து வரும் மரணங்கள் மக்களை பீதிக்குள்ளாக்கி உள்ளது. பிணங்களை அடக்கம் செய்வதற்கு நேரம் இல்லாத அளவுக்கு உடல்கள் குவிந்து வருகிறது. இங்கிலாந்திலும் உயிரிழப்பு மிக மோசமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் உலகம் முழுவதும் 3,3,04,140 பேர் கொரோனாவால் இன்று காலை நிலவரப்படி பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 2,33,829 ஆக அதிகரித்துள்ளது. குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை என்பது 1,0,39,055 ஆக உயர்ந்துள்ளது.
உலகிலேயே மிக அதிகமாக அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் மட்டும் 2,201 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அங்கு கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 63,856 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் நேற்று ஒரு நாளில் 674 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26,771 உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 11 குழந்தைகள்.. மொத்தமாக 142 குழந்தைகள்.. தமிழகத்தில் தீவிரம் அடையும் கொரோனா பாதிப்பு!
இத்தாலியில் நேற்று 285 பேரும், ஸபெயினில் 268 பேரும், பிரான்சில் 289 பேரும் ஜெர்மனியில் 156 பேரும் ரஷ்யாவில் 101 பேரும்,, பிரேசிலில் 390 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ள
#SL_TAMIL_MUSLIM_TV_NETWORK
by-M.WASEEM.T.M
4 நான்கு மாவட்டங்களின் அனைத்து நடவடிக்கையும் ஆரம்பிக்க கோட்டாபய
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும், மக்களின் வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பாடுகளை ஆரம்பிக்கமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 11ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி செயலகம் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளை நடத்தி செல்லுதல் மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களை திங்கட்கிழமை முதல் நடத்தி செல்ல வேண்டும்.
சேவையின் அத்தியாவசியத்தை கருத்திற்கு கொண்டு அதற்கு அவசியமான திட்டங்களை தற்போதிருந்தே தயாரிக்குமாறு நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களை திறந்து நடத்தி செல்லும் போது கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவை பணிப்பாளர் தலைமையிலான சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ள அவுறுத்தல்களை முழுமையாக கடைபிடிப்பதனை அவதானிக்க வேண்டியது நிறுவன பிரதானிகளின் பொறுப்பாகும்.
திணைக்களம், கூட்டுத்தாபனம் உட்பட அரச நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்பட வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் ஊழியர்கள் அழைக்கப்படுவது எந்த பணிக்கு என்பதனை நிறுவனங்களின் பிரதானிகளின் வழிக்காட்டல்களுக்கமைய தீர்மானிக்கப்படும். தனியார் நிறுவனங்கள் திறக்கப்படும் நேரம் காலை 10 மணியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கைக்காக மக்கள் அவசியமற்ற முறையில் வீதிக்கு வருதல் மற்றும் வேறு இடங்களில் ஒன்று கூடுவதனை நிறுத்த வேண்டும். போக்குவரத்து சபை பேருந்துகள் மற்றும் ரயில் பெட்டிகளில் பணிகளுக்கான பயணிகள் போக்குவரத்து மேற்கொள்ள மாத்திரம் மட்டுப்படுத்த வேண்டும்.
அத்தியாவசிய சேவைக்கு செல்லும் நபர்களை தவிர்த்து ஏனைய மக்கள் நோய் தடுப்பு பணிகளுக்காக வீடுகளில் இருந்து உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
யாரேனும் வீட்டை விட்டு செல்ல வேண்டும் என்றால் உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள மாத்திரமே செல்ல முடியும்.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவடங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளுக்கு மே மாதம் 6ஆம் திகதி வரை முன்னர் காணப்பட்ட, அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டு 8 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் முன்னெடுக்கப்படும்
#SL_TAMIL_MUSLIM_TV_NETWORK
Ft.by-M.WASEEM.T.M
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்! எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா தொற்றாளர்கள்!எண்ணிக்கை 674ஆக அதிகரிப்பு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 8 பேர் இன்று பிற்பகல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 671ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 157 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 510 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
#SL_TAMIL_MUSLIM_TV_NETWORK
Ft.by-M.WASEEM.T.M

மிகப்பெரிய 'இறுதி' ஊர்வலத்திற்கு 'தயாராகும்' வடகொரியா?... வைரலாகும் 'செயற்கைக்கோள்' படங்கள்!





மே 10க்கு முன் கொரோன கட்டுப்படுத்தப் படாவிட்டால் தேர்தலை நடத்த முடியாது - மஹிந்த தேசப்பிரிய... If the coronation is not controlled before May 10, elections will not be held - Mahinda Deshapriya ...

மே மாதம் 10ம் திகதிக்கு முன்னர் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தி விட்டதாக சுகாதார துறை அறிவித்தால் மாத்திரமே ஜுன் 20ம் திகதி தேர்தலை நடத்துவது சாத்தியமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான ஆரம்ப கட்ட வேலைகளை முன்னெடுத்து வரும் தேர்தல்கள் தினைக்களம் முக்கியமான வேலைகளை இறுதி நேரத்தில் தான் மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.
#SL_TAMIL_MUSLIM_TV_NETWORK
Ft.M.WASEEM.T.M Elections commission president Mahinda Deshapriya said the elections would be held on June 20 only if the health department announced that it had completely controlled Corona before May 10. He added that the elections, which are in the early stages of the election, will carry out important work at the end of the day. #SL_TAMIL_MUSLIM_TV_NETWORK Ft.M.WASEEM.T.M
கொரோனாவை வெற்றிகொள்வேன்-ஜனாதிபதி கோட்டாபய சூளுரை! President will win Corona #gotabaya #covid19
நாட்டில் பரவிவரும் கொரோனா அச்சுறுத்தலை நிச்சயம் வெற்றிகொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது மே தின வாழ்த்துச் செய்தியில் அவர் இந்த சவாலை விடுத்திருக்கிறார்.
கடந்த வருடம் மிலேச்சத்தனமாக தீவிரவாத தாக்குதலினால் பல்வேறு சங்கடங்கள் ஏற்பட்டதாக கூறிய அவர், தற்போது முழு உலகத்திற்கும் எதிர்பாரா தொற்று பரவி நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றதாகவும் குறிப்பிட்டார்.
இத்தருணத்தில் இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை நிச்சயம் நாம் வெற்றிகொள்வோம் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சூளுரைத்துள்ளார்
Ft.M.WASEEM.T.M
President Gotabhaya Rajapakse says he will definitely overcome the corona threat spreading across the country.
In his May Day greeting, he addresses the challenge.
He said that last year's barbaric terrorist attack had caused many embarrassments, and that the current epidemic had spread to the entire world.
President Gotabhaya Rajapaksa has asserted that the coronavirus threat will surely be overcome at this moment.
Ft.M.WASEEM.T.M
LIKE|SHARE |FALLOW
#SL_TAMIL_MUSLIM_TV_NETWORK
Expanded Covid19 Influence in Sri Lanka இலங்கையில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை...
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 666ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 154 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் இந்த உயிர்கொல்லி நோயால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 505 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Someone else experiencing coronavirus in Sri Lanka has been distinguished, the Ministry of Health's Epidemiology Unit declared today.
Therefore, the quantity of individuals contaminated with coronavirus expanded to 666.
With the passing of 154 individuals totally destitute, seven individuals kicked the bucket of the infection.
It is additionally essential that 505 individuals are accepting treatment clinics.
M.wasee.t.m
#SL_tamil_musli_tv_network
#covid19live
இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 666ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 154 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் இந்த உயிர்கொல்லி நோயால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 505 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Someone else experiencing coronavirus in Sri Lanka has been distinguished, the Ministry of Health's Epidemiology Unit declared today.
Therefore, the quantity of individuals contaminated with coronavirus expanded to 666.
With the passing of 154 individuals totally destitute, seven individuals kicked the bucket of the infection.
It is additionally essential that 505 individuals are accepting treatment clinics.
M.wasee.t.m

#SL_tamil_musli_tv_network
#covid19live

இலங்கையில் பெற்றோல் 75 ரூபா, ஒரு லீற்றர் டீசல் 52 ரூபா? #petrol #diesel
இலங்கையில் ஒரு லீற்றர் பெற்றோல் 75 ரூபாவிற்கும், டீசல் ஒரு லீற்றர் 52 ரூபாவிற்கும் விற்பனை செய்ய முடியும் என பெற்றோலிய கூட்டுத்தாபன பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ள காரணத்தினால் இலங்கையில் அனைத்து செலவுகளையும் ஈடு செய்ததன் பின்னர் இந்த விலை மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலச சந்தையில் எரிபொருளுக்கான விலைகளை நிர்ணயம் செய்ய முடியாத நிலைமை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்பொழுது நாட்டில் கையிருப்பில் உள்ள எரிபொருளானது ஒரு பெரல் 37 டொலருக்கு கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எரிபொருளுக்கான விலை குறைப்பு ஏன் மக்களுக்கு சென்றடையவில்லை என அரசாங்கத்திடம் கோரிய போது அந்த விலை குறைப்பு நிவாரணத்தை பருப்பு, செமன் போன்ற பொருட்களுக்கு வழங்கி வருவதாக பதில் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், தற்பொழுது பருப்பு மற்றும் செமன் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வேலும் தெரித்துள்ளார். #SL_TAMIL_MUSLIM_TV_NETWORK
Ft.M.WASEEM.T.M
Ft.M.WASEEM.T.M
Subscribe to:
Posts (Atom)